search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடுத்தடுத்து விபத்து"

    • கரிக்கம்பட்டு பகுதியில் வந்த போது, பிச்சைக்காரர் ஒருவர் சாலையை கடந்துள்ளார்.
    • காயமடைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்திலிருந்து திண்டிவனம் நோக்கி நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் விழுப்புரத்தை சேர்ந்த நாகப்பன் (வயது 51), சிவபாலன் (57) ஆகியோர் இன்று காலை 11 மணியளவில் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் ஒலக்கூர் அடுத்த கரிக்கம்பட்டு பகுதியில் வந்த போது, பிச்சைக்காரர் ஒருவர் சாலையை கடந்துள்ளார். இவர் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்பினர். இதில் மோட்டார் சைக்கிள் பின்னால் வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. கார் பின்னால் வந்த அரசு பஸ், காரை மோதியது. அரசு பஸ் பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, அரசு பஸ் மீது மோதியது. கண்டெய்னர் பின்னால் வந்த கார், கண்டெயினர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் உள்பட கடலூரை சேர்ந்த தையல்நாயகி (47), வடலூரை சேர்ந்த சுரேஷ்குமார் (50), விழுப்புரம் பொன்னி (45), பண்ருட்டி பலராமன் (61), திண்டிவனத்தை சேர்ந்த ஜெயபிரதாப் (28), ரமணி (30), பெருமாள் (40) ஆகியோர் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி, திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது தொடர்பாக ஓலக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதால் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    ×